கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் டெல்டா வைரஸின் பரவல் குறைந்து ஒமைக்ரான் அதிகரித்து வருகிறது: மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி : இந்தியாவில் கரோனாவின் டெல்டா வைரஸின் பரவல் குறைந்து ஒமைக்ரான் வரைஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எண்ணிக்கையின் அளவிலும் ஒமைக்ரான் வைரஸ் அதிகரித்து வருகிறது, வெளிநாடுகளில் இருந்து வந்து கரோனாவில் பாதி்க்கப்படுவோரில் 80 சதவீதம்பேர் ஒமைக்ரான் பாதிப்போடு இருக்கிறார்கள் என்பதால், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்துக்கு பின் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 20ஆயிரத்துக்குமேல் சென்று 27ஆயிரம்பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1525 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460 பேரும், டெல்லியில் 351 பேரும், தமிழக்தில் 121 பேரும் குஜராத்தில் 136 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2021 டிசம்பர் மாதத்தின் கடைசி 11 நாட்களில் மட்டும் இந்தியாவில் கரோனாவில் 1.14 லட்சம் பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். இதில் 46 சதவீதம் பேர் மாதத்தின் கடைசி 3 நாட்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் லேசான அறிகுறியோடும், அறிகுறி இல்லாமலும் இருக்கிறார்கள்.

பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பரிசோதனை அளவு குறைந்துவிட்டது. இதைச் சுட்டிக்காட்டி கடந்த வியாழக்கிழமை மத்திய அ ரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில் கரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரஸைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்கு பரிசோதனையில்தான் இருக்கிறது. ஆதலால் பரிசோதனையை விரைவுப்படுத்துங்கள். ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்தியாவில் டிசம்பர் 2-ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அதன்பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் பிரதமர் மோடியும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மருத்துவ வல்லுரநர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடனும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடர்ந்து ஆலோசனை நடத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

கரோனா தடுப்பூசி அளவு, அத்தியாவசிய மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள், வெண்டிலேட்டர்கள் இருப்பு ஆகியவை குறித்தும் மண்டவியா தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார்.

மத்திய அரசு அமைத்துள்ள வார் ரூம் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் குறித்த செய்திகள், புள்ளிவிவரங்கள் சேகரித்தும், அதன்பரவலையும் தொடர்்ந்து வல்லுநர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மாநிலங்கள் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும், மருத்துவனை தயாராக வைத்திருக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தும் அளவை அதிகப்படுத்த வேண்டும், கரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமல்படுத்தவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது

SCROLL FOR NEXT