மும்பையில் நடந்த கொலைகள் தொடர்பாக நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது சிபிஐ தரப்பில் இரு புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் முதல் வழக்கு மும்பை யின் பெந்தி பஜார் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பானது. கடந்த 2010 பிப்ரவரியில் சோட்டா ராஜன் ஏவிய கூலிப்படையினர் பெந்தி பஜார் பகுதியில் வைத்து ஷகீல் மோடக் மற்றும் இர்பான் குரேஷி ஆகிய இருவரை சுட்டுக் கொன்ற னர். ஆசிப் தாதி என்பவர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக் கப்பட்டிருந்தது. இதில் ஷகீல் மோடக் என்பவர் சொந்தமாக மீன் பிடி படகு வைத்து தொழில் நடத்திய வர். பிரபல அரசியல்வாதிக்கும் நெருக்கமாக இருந்தவர். குரேஷி பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட தாதி மும்பை போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந் தார். ஆனால் நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக் கப்படாததால் சுதந்திரமாக வெளியே வந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அடையாளம் தெரியாத 4 பேர் மீது கொலை மற்றும் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
ஓட்டல் தொழிலதிபரான பி.ஆர்.ஷெட்டி என்பவர் 2012 அக்டோபரில் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையிலும் சோட்டா ராஜனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படு கிறது. எனவே, 2வது வழக்காக இந்த கொலை வழக்கையும் சோட்டா ராஜன் மீது சிபிஐ நேற்று பதிவு செய்தது.
இது தொடர்பாக சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.கே.கவுர் கூறும் போது, ‘‘இந்த இரு வழக்கு களையும் இனி சிபிஐ விசாரிக்கும்’’ என்றார். இதுதவிர சோட்டா ராஜனுக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐ-க்கு மகாராஷ்டிர அரசு நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
எனினும் சோட்டா ராஜனுக்கு எதிராக சிபிஐ தரப்பில் இதுவரை 3 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.