இந்தியா

இந்தியாவில் 1,431 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: அன்றாட கரோனா தொற்று 22,775; உயிரிழப்பு 406

ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 454 பேருக்கும், அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 118 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 22,775.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,48,61,579.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 8,949.

இதுவரை குணமடைந்தோர்: 3,42,75,312.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.32% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 406.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,81,486.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,04,781.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,45,16,24,150 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக ஒமைக்ரான் பாதிப்பு நிலவரம்:

SCROLL FOR NEXT