இந்தியா

கர்நாடகாவில் பலாத்கார வழக்கில் இருந்து மடாதிபதி ராகவேஸ்வர பாரதி விடுவிப்பு

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் ராம கதா பாடகியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் மடாதிபதி ராகவேஸ்வர பாரதி நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

கர்நாடகாவை சேர்ந்த ராம கதா பாடகி ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு ராமச்சந்திரபுர மடத்தின் தலைவர் ராகவேஷ்வர பாரதி தன்னை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு மடாதிபதி ராகவேஸ்வர பாரதி குற்றமற்றவர் என விடுவித்தது. இதை எதிர்த்து ராம கதா பாடகி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஷானந்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்நிலையில் நீதிமன்றம் நேற்று, ''ராகவேஸ்வர பாரதி மீதான பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே பெண் புகார்தாரரின் மனுவும் அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது''எனக்கூறி, அவரை நிரபராதி என விடுவித்தது.

இவ்வழக்கில் இருந்து மடாதிபதி ராகவேஸ்வர பாரதி விடுதலையாகி உள்ள நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கும், நில அபகரிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT