ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ.ஏ. பாத்மி அனைத்து பொறுப்புகளிலி ருந்தும் புதன்கிழமை விலகினார்.
நிருபர்களிடம் அவர் கூறிய தாவது: கட்சியின் கட்டுக்கோப்பு குலைந்ததற்கு லாலுவும் மூத்த தலைவர் பிரேம் சந்த் குப்தா வுமே காரணம். குப்தாவின் கண்ண சைவுக்கு ஏற்றபடி லாலு செயல் படுகிறார். அவரது தவறான கொள்கைகளை சீர் தூக்கி பார்க்காமல் அப்படியே நிறை வேற்றுகிறார்.
லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுடன் கூட்டணி வைப்போம் என 11 மணி நேரம் நான் போராடிப் பார்த்தேன்; ஆனால் லாலு மசியவில்லை. பிரேம் சந்த் குப்தா கூறிய வார்த்தைகளை கேட்டு பாஸ்வானுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கி அதன் மூலமாக அவரை கூட்டணியிலிருந்து வெளியேறச் செய்தார். என்னையும் பாஸ்வானையும் லாலு அவமதிப்பு செய்தார்.
அதனால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவா ளர்களுடன் பேசி முடிவு செய்வேன் என்றார் பாத்மி.
காங்கிரஸ் கூட்டணியின் முதலாவது ஆட்சி காலத்தில் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த பாத்மி, அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் தர்பங்கா தொகுதியில் போட்டியிட்டு பாஜக-வின் கீர்த்தி ஆசாதிடம் தோல்வி அடைந்தார்.