பிரஸல்ஸ் நகரில் உள்ள ஜவென்டம் விமான நிலையம், மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.
இதனால் பிரஸல்ஸில் சிக்கித் தவித்த இந்தியர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூலம் இன்று வெள்ளிக்கிழமை காலை புதுடெல்லி வந்தடைந்தனர்.
விமான ஊழியர்கள் 28 பேர் உட்பட 242 பேர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து இந்தியா வந்தடைந்தனர்.
முன்னதாக, பிரஸல்ஸில் சிக்கியுள்ளவர்களை விமானங்கள் மூலம் மீட்டு டெல்லி, மும்பை, டொரன்டோ ஆகிய 3 நகரங்களில் தரையிறக்க உள்ளதாக கடந்த செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மும்பை விமானம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டு அந்த விமானத்தில் வரவேண்டியவர்களை டெல்லி விமானத்தில் ஏற்றினர்.
இந்நிலையில், முதல் விமானம் இன்று காலை காலை 5.30 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.