இந்தியா

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை: தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்பும் மத்திய அரசு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட கடிதத்தில், 'ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஒழுங்குமுறை குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது இந்தக் குழு மூன்று முதல் ஐந்து நாட்கள் மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும். மேலும் தொற்று பரவல் பகுதிகள், கரோனா பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை இக்குழுக்கள் கண்காணிக்க உள்ளது.

மருத்துவமனைப் படுக்கைகள், ஆம்புலன்ஸ்கள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் ஆகியவற்றை மாநிலங்கள் ஏற்பாட்டுடன் வைத்திருக்க தயார் செய்வது இக்குழுவின் பொறுப்பாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 415 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேரும், டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும், தமிழகத்தில் 34 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 115 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT