இந்தியா

திருப்பதி கோயிலில் இலங்கை பிரதமர் ராஜபக்ச சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

திருப்பதிக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று காலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது குடும்பத்தாருடன் கடந்த வியாழக்கிழமை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். பின்னர், சாலை மார்க்கமாக திருமலை சென்ற இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதனை தொடர்ந்து நேற்று காலை மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களுக்கு தேவஸ்தானத்தினர் தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.

பின்னர், ரங்கநாயக மண்டபத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் தீர்த்த பிரசாதங்கள், லட்டு பிரசாதங்கள் மற்றும் சுவாமியின் திருவுருவப்படம் ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார்.

SCROLL FOR NEXT