திருப்பதி அருகே ரூ.1.28 கோடி மதிப்பிலான செம்மரங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர் கிறது. இந்நிலையில் திருப்பதி அருகே சந்திரகிரி மண்டலத்தில் 3 இடங்களில் போலீஸார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட் டனர். இதில் ரூ. 1.28 கோடி மதிப் புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 12 பேரை கைது செய்துள்ளனர்.