கர்நாடக சட்டப்பேரவையில் 2 முறை மின்வெட்டு ஏற்பட்ட தால், முதல்வர் சித்தராமையா செல்போன் டார்ச் வெளிச்சத் தில் பட்ஜெட் உரையை வாசித் தார். இதனால் மின்வெட்டுக்கு காரணமான 3 பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளனர்.
கர்நாடக முதல்வரும், நிதி அமைச்சருமான சித்தராமையா, 2016-17-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ‘‘பெங்களூரு மாநகர வளர்ச்சிக் கும், பராமரிப்பு பணிகளுக்காகவும் ரூ.5 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த வர்களுக்கு பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் மூலம் இலவச மாக 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும். பெங்களூரு சாலைகள் ரூ. 300 கோடி செலவில் மேம் படுத்தப்படும்.
ரஸல் மார்க்கெட், ஜான்சன் மார்க்கெட், கேஆர்.மார்க்கெட் ஆகியவை ரூ.200 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். பெங்களூ ருவில் உள்ள ஏரிகள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். குப்பை பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ரூ.500 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை நிர்வாகம் மேற் கொள்ளப்படும். ரூ.800 கோடி செலவில் மாநகரம் முழுவதும் மழைநீர் கால்வாய் அமைக்கப் பட்டு, நிலத்தடி நீர் ஆதாரம் மேம் படுத்தப்படும்’’ என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப் புக்கு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.
பட்ஜெட் உரையை சித்த ராமையா வாசித்தபோது 2 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதையடுத்து, ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் வரும் என எதிர்ப்பார்த்து சித்தராமையா சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் மின்சாரம் வராததால் சட்டப்பேரவை உதவியாளரின் உதவியுடன் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சித்தராமையா பட்ஜெட் உரையை உரத்தக் குரலில் வாசித்தார். 2 முறையும் தலா 5 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டதால் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் கூச்சலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக தலைமைச் செயலகத் தில் 24 மணி நேரமும் தடை யில்லா மின்சாரம் வழங்க, நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை மின்சாரம் தடைபட்டாலும், உடனடியாக இயங்கும் வகை யில் ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலை யில் பட்ஜெட் உரையின் போது 2 முறை மின்சாரம் துண்டிக்கப் பட்டதற்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மின்துறை அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் மின் வெட்டுக்கு காரணமான 3 பொறி யாளர்களை இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ராகு காலத்தில் தாக்கல்
வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம் ஆகும். மூடநம்பிக் கைக்கு எதிரான சித்தராமையா, நேற்று முன்தினம் திட்டமிட்டு ராகு காலத்தில் (11.30) பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்கு மதச் சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் குழு துணைத்தலைவர் ஒய்.எஸ்.தத்தா, “மூட நம்பிக்கையை பொய் யாக்கும் வகையில் ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு வாழ்த்துகள்” என்றார். அதற்கு சித்தராமையா சிரித்துக்கொண்டே நன்றி சொன்னார்.