இந்தியா

குஜராத் பஞ்சாயத்து தேர்தலில் தனது ஒரு வாக்கை மட்டுமே பெற்ற வேட்பாளர்

செய்திப்பிரிவு

காந்திநகர்: குஜராத் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு அவருடைய ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குஜராத்தில் உள்ள 8,686 கிராமங்களுக்கான பஞ்சாயத்து தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 6,481 கிராமப் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் வாபி மாவட்டத்தில் உள்ள சார்வாலா கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சந்தோஷ் ஹல்பாத்தி என்பவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருக்கிறார். அந்த ஒரு வாக்கும் அவரால் செலுத்தப்பட்டதுதான். அவரது குடும்பத்தில் 12 பேர் இருந்தும் ஒருவர் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் சந்தோஷ் மனமுடைந்து அழுதுவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தேர்தலில் வெற்றி தோல்வி சகஜமானது என்பதைநான் அறிவேன். இந்த தேர்தலில் தோல்விஅடைந்தது குறித்து கூட நான் கவலைப்படவில்லை. ஆனால், எனது குடும்பத்தினர் கூட எனக்கு வாக்களிக்கவில்லை என்பதை அறியும்போது தான் மிகவும் கவலையாக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT