ஆந்திர சபாநாயகர் தம்மிநேனி சீதாராம், கபடி ஆடியபோது நேற்று கீழே விழுந்தார். 
இந்தியா

கபடி விளையாடும் போது கீழே விழுந்த ஆந்திர சபாநாயகர் தம்மிநேனி சீதாராம்

செய்திப்பிரிவு

ஸ்ரீகாகுளம் ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் தம்மிநேனி சீதாராம், நேற்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆமுதாலவலசா ஜூனியர் கல்லூரியில் கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இவர் கபடி வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கபடி ஆட தொடங்கினார். அப்போது கூடி நின்ற அனைவரும் சபாநாயகரை உற்சாகப்படுத்தினர். ஆனால், திடீரென சபாநாயகர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு எழுந்த அவர், “விளையாட்டில் இதெல்லம் சகஜமப்பா” என கூறி, மீண்டும் சில நிமிடங்கள் வீரர்களுடன் கபடி ஆடி உற்சாகப்படுத்தி விட்டு காரில் புறப்பட்டு சென்றார். மாநில அளவில் ’சிஎம் கபடி’ விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்க உள்ளார். ஆதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்போட்டிகள் தற்போது உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT