இந்தியா

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 490 பேருக்குக் கரோனா தொற்று

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் அன்றாட கரோனா தொற்று கடந்த 48 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 1,201 பேருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. மும்பை மாநகரில் மட்டும் 490 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக 8 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் ஒரே ஆறுதலாக மாநிலத்தில் புதிதாக யாருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதியாகவில்லை. இதுவரை மாநிலத்தில் 65 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி அவர்களில் 35 பேர் உடல்நலன் தேறி வீடு திரும்பியுள்ளனர்.

மும்பையில் மட்டும் கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 7,68,148 பேருக்கு தொற்று உறுதியாகி 16,366 உயிர்களைப் பறித்துள்ளது.

மும்பையில் தற்போது 2,419 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 2021 ஆம் ஆண்டில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி மும்பையில் 11,163 பேருக்கு கரோனா உறுதியாகியது. இதுவே இதுவரை பதிவு அன்றாட அதிக பாதிப்பு. மே 1ல் 90 பேர் இறந்ததே அதிகபட்ச உயிரிழப்பு.

SCROLL FOR NEXT