இந்தியா

BH சீரிஸ் - வாகனங்களின் அகில இந்திய பதிவின் நடைமுறைகள்: மத்திய அரசு விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாகனங்களுக்கு BH சீரிஸ் எனப்படும் இந்திய பதிவினைப் பெறுவதற்கான நடைமுறைகள் என்னவென்று மத்திய அரசு விளக்கியுள்ளது.

வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் பிஎச் என தொடங்கும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் போக்குவரத்து வாகன விதிகளின்படி ஓராண்டிற்குள் மறு பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிவுடன் அந்த மாநிலத்திற்கான சாலை வரியையும் உரிமையாளர்கள் கட்ட வேண்டும்.

தொழில் மற்றும் வேலை ஆகியவை காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறும் நிலை தற்போது பலருக்கு நிலவி வருகின்றது. அவ்வாறு மாறுவோர்களில் பலர் தங்களின் வாகனத்தை அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு பதிவை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வந்தனர்.

வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் பிஎச் என தொடங்கும் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்துள்ளார்.

புதிய வாகனங்களுக்கான “பாரத் தொடர் BH சீரிஸ் எனும் புதிய பதிவு அடையாளத்தை 26.08.2021 அன்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

இந்தப் பதிவு முத்திரையைக் கொண்ட ஒரு தனிப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும் போது, வாகனத்திற்கு புதிய பதிவு முத்திரையை பெற வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்புப் பணியாளர்கள், மத்திய அரசு/மாநில அரசுகள்/மத்திய/மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தங்கள் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இந்த வாகனப் பதிவு வசதி வழங்கப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு அல்லது இரண்டின் மடங்குகளில் மோட்டார் வாகன வரி விதிக்கப்படும். பதினான்காம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, மோட்டார் வாகன வரி ஆண்டுதோறும் விதிக்கப்படும். இது அந்த வாகனத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட தொகையில் பாதியாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT