இந்தியா

கல்லூரி தொடங்கும் முன்பே பட்டம் பெற்றாரா?: கோபிநாத் முண்டேவின் கல்வித் தகுதி பற்றி காங். கேள்வி

செய்திப்பிரிவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி யின் கல்வித் தகுதி குறித்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே, மற்றொரு மத்திய அமைச்சர் மீதும் இதே கல்வித் தகுதி அஸ்திரத்தைப் பிரயோகித்துள்ளது காங்கிரஸ்.

மத்திய மனித வள மேம்பாட்டு மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்டப்படிப்பு கூட முடிக்காதவர் என அவர் மீது விமர்சனக் கணை தொடுத் தது காங்கிரஸ். இது நாடு முழுவதும் பெரும் பரப்பையும் விவாதத்தையும் தோற்றுவித்தது.

இம்முறை, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே கல்வித் தகுதி சர்ச்சை யில் சிக்கியுள்ளார்.

ஒரு கல்லூரி தொடங்கப்படுவ தற்கு 2 ஆண்டுகளுக்கு முன் பாகவே அக்கல்லூரியில் பட்டம் பெற்றதாக கோபிநாத் முண்டே வேட்புமனுத் தாக்கலில் தெரிவித் துள்ளார். இதனை காங்கிரஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது தனது ட்விட்டர் தளத்தில், “ பாஜக மூத்த தலைவரும், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்ச ருமான முண்டே, 1978-ல் தொடங்கப்பட்ட ஒரு கல்லூரி யில் 1976-லேயே பட்டம் வாங்கியி ருக்கிறார். அவரின் இந்தச் ‘சாதனை’ குறித்து சமூக இணைய தளங்கள் விவாதித்து வரு கின்றன” என அவர் பதிவிட்டுள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலில் முண்டே தாக்கல் செய்துள்ள வேட்பு மனு பிரமாணப்பத்திரத் தில், புணேவிலுள்ள நியூ சட்டக் கல்லூரியில் 1976-ல் பட்டம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட் டுள்ளார்.

ஆனால், அந்தக் கல்லூரி 1978-ல் தொடங்கப்பட்டதாக, அக்கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT