இந்தியாவின் பெயரை பாரத் ஆக மாற்றக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
மகாராஷ்டிராவை சேர்ந்த நிரஞ்சன் பத்வால் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில், நாட்டின் பெயரை ‘பாரத்’ ஆக மாற்ற வேண்டும் என்று கோரியிருந் தார். ஓராண்டாக நடைபெற்று வந்த இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதி யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.