அசாம் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தொடர்ந்து 4-வது முறையாக திதபர் தொகுதியில் முதல்வர் தருண் கோகோய் போட்டியிடுகிறார்.
இவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனக்கு ரூ.49,95,022 மதிப்பிலான அசையா சொத்தும் தனது மனைவி டாலிக்கு ரூ.49,88,717 மதிப்பிலான அசையா சொத்தும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் வங்கி டெபாசிட், காப்பீட்டு பாலிசிகள், அஞ்சக சேமிப்புகள், பங்குகள் உள்ளிட்டவை அடங்கும்.
இதுதவிர தங்களுக்கு குவா ஹாட்டி, டெல்லி ஆகிய இடங்களில் ரூ.4.25 கோடி மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாகவும் கோகோய் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல பாஜகவின் முதல்வர் வேட்பாளரான சர்பானந்த சோனோவால் மஜுலி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், ரூ.12 லட்சம் மதிப்பிலான வங்கி டெபாசிட், ரூ.8.77 லட்சம் மதிப்பிலான ஆயில் இந்தியா நிறுவன பங்குகள் உட்பட மொத்தம் ரூ.70,44,919 மதிப் பிலான அசையா சொத்து இருப்ப தாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது அசையா சொத்து மதிப்பு ரூ.1.15 கோடி