புதுடெல்லி: இந்தியா-மத்திய ஆசிய நாடுகளின் 3-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
வரலாற்று ரீதியாக ஆப்கானிஸ்தானுடன் நாம் ஆழ்ந்த உறவை கொண்டிருக்கிறோம். அந்த நாட்டின் மீதான நமது அக்கறை, நோக்கம் ஒன்றாகவே உள்ளது. தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக ஆப்கன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நாட்டின் தற்போதைய நிலைமை கவலை யளிக்கிறது. எனவே, அந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்வதற்கான வழிகளை நாம் கண்டறிவது அவசியம்.
மத்திய ஆசியா நாடுகளுட னான இந்தியாவின் உறவு வலுவடைந்து வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் சர்வதேச பொரு ளாதாரம், சுகாதாரம் பின்ன டைவை சந்தித்துள்ளது. இந்த நேரத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.