புதுடெல்லி: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,000 கோடி நிதியை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அதன்படி பிரயாக்ராஜ் நகரில் இன்று மிக பிரம்மாண்டமான மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பெண்களுக்கான புதிய திட்டங் களை தொடங்கி வைக்கிறார்.
மேலும் 16 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1,000 கோடி நிதியுதவியை பிரதமர் வழங்கவுள்ளார். தவிர 20 லட்சம் பெண்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், பெண் குழந்தை களுக்கு நிதியுதவி செய்யும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். மாநாட்டில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டின்போது பெண் குழந்தைகள் நலனுக்காக முதல்வர் கன்யா சுமங்களா திட்டத்தின் கீழ் ரூ.20 கோடியை பிரதமர் நரேந்திர மோடி வழங்க வுள்ளார்.
மேலும் 202 சத்துணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல்லையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டவுள்ளார். இந்தத் தொழிற்சாலைகள் தலா ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.
- பிடிஐ