இந்தியா

5 ஆண்டில் 15 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் 31 வீரர்கள் உயிரிழப்பு: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தகவல்

செய்திப்பிரிவு

கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளைச் சேர்ந்த 15 ஹெலிகாப்டர்கள் விபத்துகளில் சிக்கியுள்ளன என்றும், இதில் 31 பேர்இறந்துள்ளனர் என்றும் மத்தியபாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கேள்வி நேரத் தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய இணைச்சர் அஜய் பட் அளித்த பதில்: கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளைச் சேர்ந்த 15 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாயின. இதில் 31 பேர் இறந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் 3 எம்-17 வி5 ரக ஹெலிகாப்டர்களும் அடக்கம். முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் இறந்ததும் இந்த வகை ஹெலிகாப்டர் விபத்தில்தான்.

2017-ல் அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் தவாங் பகுதியில் எம்-17வி5 ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியபோது 7 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளில் ராணுவம் மற்றும் விமானப்படையில் இருந்து தலா 7 ஹெலிகாப்டர்களும், கடற்படையைச் சேர்ந்தஒரு ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

SCROLL FOR NEXT