இந்தியா

மதுரை எய்ம்ஸுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?- மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதன்படி, 2019-20-ல் ரூ. 3.12 கோடியும், 2020-21-ல் ரூ.4.23 கோடியும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்

பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (பிஎம்எஸ்எஸ்ஒய்) புதிய எய்ம்ஸ் அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைப்பதற்கு இவற்றை செயல்படுத்தும் முகமைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை இன்று மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலம் அளித்த பதிலில் வெளியிட்டார்.

அதில் தமிழ்நாட்டில் மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-20-ல் ரூ. 3.12 கோடியும், 2020-21-ல் ரூ.4.23 கோடியும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Sl.

எய்ம்ஸ்

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு (Rs. in cr.)

2019-20

2020-21

1

ரேபெரேலி, உத்தரப்பிரதேசம்

176.54

200.34

2

மங்கலகிரி, ஆந்திரப்பிரதேசம்

233.11

261.10

3

நாக்பூர், மகாராஷ்டிரா

340.11

231.77

4

கல்யாணி, மேற்குவங்கம்

316.19

274.02

5

கோரக்பூர், உத்தரப்பிரதேசம்

332.17

127.13

6

படிண்டா, பஞ்சாப்

232.10

202.02

7

குவாஹாட்டி, அசாம்

167.13

166.31

8

பிலாஸ்பூர், இமாச்சலப் பிரதேசம்

280.23

378.78

9

தியோகர், ஜார்க்கண்ட்

164.32

206.63

10

விஜய்நகர்,ஜம்மு

0.00

322.35

11

அவந்திபூரா,காஷ்மீர்

0.00

211.16

12

மதுரை,தமிழ்நாடு

3.12

4.23

13

ராஜ்கோட்,குஜராத்

2.20

161.86

14

பீபீநகர், தெலங்கானா

12.09

6.77

2019-ல் மக்களவைத் தேர்தல் நெருங்கிய வேளையில் ஜன வரியில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் ‘எய்ம்ஸ்’-க்கு நிதிக்காக ஜைக்கா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது.

இந்நிலையில் இதுவரை, 2019-20-ல் ரூ. 3.12 கோடியும், 2020-21-ல் ரூ.4.23 கோடியும் விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT