திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி நேற்று திருப்பதி-திருமலை இடையேயான 2-வது மலைப் பாதையை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: சமீபத்தில் பெய்த மழையால் 2-வது மலைப்பாதையில் 7,8,9,14 மற்றும் 15-வது வளைவு களில் குன்றுகள் சரிந்து சாலைகள் பழுதடைந்தன. இதனால் தற் காலிகமாக லிங்க் பாதை வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மலைப்பாதை சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் இரவும், பகலுமாக நடைபெற்று வருகிறது.
ஐஐடி நிபுணர்கள் மற்றும் கேரள நிபுணர்கள் குழுவினர் ஆலோசனைப்படி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின் றன. இவை இம்மாத இறுதிக் குள் நிறைவடையும். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்னர், பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப் படுவர். வைகுண்ட ஏகாதசிக்குள் அனைத்து பணி களும் நிறைவடையும். இவ்வாறு சுப்பா ரெட்டி கூறினார்.