இந்தியா

திரிணமூல் எம்பிக்கள் மீதான லஞ்சப் புகார் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி

பிடிஐ

திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் மீதான லஞ்சப் புகார் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் பிரச்சினையில் சிக்கிய தனியார் நிறுவனத்தை காப்பாற்று வதற்காக அதனிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக எடுக்கப்பட்ட ரகசிய வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியதும், பூஜ்ய நேரத்தின் போது இந்த விவ காரத்தை மார்க்சிஸ்ட் எம்பி முகமது சலீம் எழுப்பினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவின் எஸ்.எஸ்.அலுவாலியா, காங்கிரஸின் அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் குரல் எழுப்பினர். மேலும் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனால் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களுக்கும், பிற கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பேச எழுந்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ‘‘திரிணமூல் எம்பிக்களின் இந்த நடவடிக்கையால் நாடாளுமன்றத் தின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே உண்மை கண்டறிய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சபாநாயகர் அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்களை கேட்டபடி வெகு நேரம் அமைதி காத்த திரிணமூல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் திடீரென ஆவேச மடைந்தார். ‘‘மேற்குவங்க மாநிலத் தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க வுள்ளதால், திரிணமூல் காங்கிரஸை வீழ்த்துவதற்காக, இந்த அரசியல் சதிச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. மேலும் எந்த விதியின் கீழ் இப்பிரச் சினையை உறுப்பினர்கள் எழுப்ப சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார்?’’ என கேள்வி எழுப்பினார். இதனால் மக்களவை யில் கடும் அமளி ஏற்பட்டது.

மாநிலங்களவையிலும், நேற்று இப்பிரச்சினை எதிரொலித்தது. இடதுசாரி மற்றும் பாஜக எம்பிக் கள் இப்பிரச்சினையை எழுப்ப முயன்றனர். இதற்கு துணைத் தலைவர் குரியன் அனுமதி அளிக் காததால், ஆளுங்கட்சியினரும், இடதுசாரிகளும் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT