காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, புதன்கிழமை நடை பெற்ற மக்களவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கடைசி இருக்கையில் அமர்ந் திருந்தார்.
இந்த முறை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தினார். 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆட்சியை காங்கிரஸ் இழந்தது. கட்சியின் மக்களவைக் குழு தலைவர் பதவியை ஏற்க ராகுல் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், 16-வது மக்கள வையின் முதலாவது கூட்டம், புதன் கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியினர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர். ராகுல் காந்தி, முதல் வரிசையில் அமரா மல், 9-வது வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். அவரின் அருகே கட்சியின் எம்.பி.க்கள் அஸ்ரார் உல்-ஹக், சசி தரூர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
முதல் வரிசையில் மல்லி கார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் எம்.வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
பாஜக சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள நேரு குடும் பத்தைச் சேர்ந்த வருண் காந்தியும், ஆளும் கட்சி வரிசையின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தார்.