சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி. நாடாளுமன்றத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பிஹார் மாநிலம் சுபால் மக்கள வைத் தொகுதி உறுப்பினரான ரஞ்சித் ரஞ்சன் (42) நேற்று ஆரஞ்சு வண்ண ஹார்லி-டேவிட்சன் இரு சக்கர வாகனத்தில் நாடாளுமன்றத் துக்கு வந்தார். முன்னதாக, நீல நிற உடை, ஹெல்மெட் மற்றும் சன் கிளாஸ் அணிந்தபடி நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி வலம் வந்த அவரை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
தான் சுயமாக சம்பாதித்து இந்த வாகனத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளார் 2 குழந்தை களுக்கு தாயான ரஞ்சித். மேலும், தனது கணவரும் மக்களவை உறுப்பினருமான ராஜேஷ் ரஞ்சன் கூட இந்த வாகனத்தை ஓட்ட அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அதேநேரம் அவரை பின்னால் அமர்ந்துவர அனு மதிப்பேன் என்கிறார்.