நமது நாடு இப்போது நெருக்கடியான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கை:
நமது நாடு இப்போது நெருக்கடியான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி நடத்துபவர் கள் வெறுப்பை விதைத்து வருகின்றனர். மதச்சார்பின்மை அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மதம், ஜாதி, நிறம், இனங்களை மறந்து நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.