மறைந்த முப்படைத் தளபதிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

மயானத்தில் முப்படைத் தளபதி உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி

செய்திப்பிரிவு

டெல்லி கண்டோன்ட்மென்ட் மயானத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. சற்று நேரத்தில் கண்டொன்மென்ட் மயானத்தில் இருவரின் உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.

இன்று மதியம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம், முப்படைத் தளபதியின் உடலை சுமந்துகொண்டு அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டது. முப்படைத் தளபதியின் இல்லத்திலிருந்து காமராஜ் மார்க் வழியாக ஊர்வலமாக வந்த இறுதி ஊர்வலம் சுமார் 7.3 கிலோமீட்டர்தொலைவில் உள்ள டெல்லி கண்டோன்மென்ட் மயானத்திற்கு சற்று முன் வந்து சேர்ந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுகிலும் கண்ணீரோடு வீரவணக்கம் செலுத்தினர்.

மறைந்த முப்படை தளபதியின் உடலுக்கு பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ், தூதர்கள், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேச ராணுவதளபதிகள் பிபின் ராவத்தின் உடலுக்கு மலர் வளையங்கள் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலி நிகழ்வில் பிபின் ராவத்தின் இரு மகள்கள், குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடலுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

SCROLL FOR NEXT