பிபின் ராவத் 
இந்தியா

பாகிஸ்தான், மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல்களை மேற்பார்வையிட்டவர் பிபின் ராவத்

செய்திப்பிரிவு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத், பாகிஸ்தான், மியான்மர் நாடுகளில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதல்களை மேற்பார்வையிட்ட பெரு மைக்குரியவர்.

ராணுவத்தில் பலகட்ட பொறுப்புகளை வகித்தவரான பிபின் ராவத், தனது பணிக்காலத்தின் போது பல முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் பங்காற்றி இருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

மியான்மர் எல்லையைக் கடந்து...

வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத கும்பல்கள், அவ்வப்போது நமது ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்திவிட்டு அண்டை நாடான மியான்மரில் தலைமறைவாகி வந்தனர். இந்த சூழலில், கடந்த 2015-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் மீது நாகலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (என்எஸ்சிஎன்-கே) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, மியான்மரில் அவர்கள் தஞ்சம் புகுந்தனர். இதனை அறிந்த இந்திய ராணுவம், மியான்மர்எல்லையை கடந்து சென்று தீவிரவாதிகள் மீது துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவத் துணைத் தளபதியாக இருந்தபிபின் ராவத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த துல்லியத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரின் உரிபகுதியில் அமைந்துள்ள விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது இந்தியராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலும் பிபின் ராவத் தலைமையில் தான் நடத்தப்பட்டது.

தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்

இவை அனைத்துக்கும் மேலாக,காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்கபாடம் புகட்டும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் இந்திய ராணுவம் அதிரடியாக சென்றுதீவிரவாத முகாம்கள் மீது துல்லியத்தாக்குதல் நடத்தியது. இதில் 300-க்கும் மேற்பட்ட ஜெய்ஷ் – இ – முகமதுதீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலும் பிபின் ராவத்தின்மேற்பார்வையில் மேற்கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT