இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நீலகிரியில் விபத்துக்குள்ளனது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்வதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர் மனைவியுடன் பயணம் செய்தாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவசர ஆலாசனை நடத்தினார்.
கோவை சூலூர் விமானநிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக இன்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். இந்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று மதியம் 12.30 மணியளவில் குன்னூர் மலைப்பகுதியில் உள்ள காட்டேரி என்ற பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவசர ஆலாசனை நடத்தினார். இக்கோர விபத்து தொடர்பாக நாளை நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்வதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ராஜ்நாத் சிங் விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதியின் குடும்பத்தினரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.