இந்தியா

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை விதிகளை மீறுவோருக்கு ரூ.20 கோடி அபராதம், சிறை: மத்திய அரசு திட்டம்

செய்திப்பிரிவு

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முறைகேடு செய்வோருக்கு ரூ.20 கோடி அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தொடர்பாக புதிய மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. புதிய மசோதாவில் கிரிப்டோ சொத்து என்ற சொல்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள கிரிப்டோகரன்சிக்கு பதிலாக இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் ரிசர்வ் வங்கி பிரத்யேகமாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மசோதாவில் விதிகளை மீறுவோர் மீது ரூ.20 கோடி அபராதம் மற்றும் ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

641 சதவீத வளர்ச்சி

கிரிப்டோகரன்சி சந்தையானதுஇந்தியாவில் ஜூன் 2021-ல் 641%அளவுக்கு வளர்ச்சியடைந்துள் ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் ஆதாயங்களுக்கு வரி விதிப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.

- பிடிஐ

SCROLL FOR NEXT