ஜாக்குலின் 
இந்தியா

ரூ.52 லட்சம் மதிப்பு குதிரை; ரூ.9 லட்சம் மதிப்பிலான 4 பூனைகள்; நடிகை ஜாக்குலினுக்கு பரிசளித்த சுகேஷ்: அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

செய்திப்பிரிவு

பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின்பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையையும், ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பூனைகளையும் பரிசாக வழங்கியதாகஅமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர், ரூ.2000 கோடி பணமோசடி வழக்கில் 2019-ம் ஆண்டுகைது செய்யப்பட்டனர். அந்தவழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதாகக் கூறிய சுகேஷ் சந்திரசேகர், அவ்விருவரின் மனைவிகளிடமிருந்து ரூ.200 கோடி பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரதுமனைவி லீனா மரியா பால் உட்பட8 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின்போது, சுகேஷ் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள 4 பெர்சிய பூனைகள் உட்பட ரூ.10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ஜாக்குலின் தவிர, மற்றொரு பாலிவுட் நடிகையான நூரா ஃபதேயிக்கும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை சுகேஷ் பரிசளித்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜாக்குலினும் நூரா ஃபதேயியும் அமலாக்கத் துறையினால் விசாரிக்கப்பட்டனர்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த சுகேஷ், சிறையில் இருந்தபடியே வெளியில் பண மோசடியில் ஈடுபடுவதற்காக சிறை அதிகாரிகளுக்கு கோடிகளில் லஞ்சம் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக 5 மூத்த சிறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்தில் நிறுத்தம்

இதனிடையே, வரும் 10-ம்தேதி பாலிவுட் நடிகர் சல்மான் கான் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் த-பாங் டூர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.அதில் பங்கேற்பதற்காக ரியாத்செல்வதற்காக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று மாலை மும்பை விமான நிலையம் சென்றார். அப்போது ஏற்கெனவே அமலாக்கத் துறை பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் குடியேற்றத் துறை அதிகாரிகள் ஜாக்குலின் பெர்னாண்டஸை தடுத்து நிறுத்தி வீட்டுக்கு திருப்பி அனுப்பினர்.

SCROLL FOR NEXT