இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மகாாஷ்டிராவில் 7 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
ெதன் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் பல்ேவறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸுக்கு அஞ்சி உலக நாடுகள் தென் ஆப்பிரிக்க நாடுகள், ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கும் தடை விதித்துள்ளது. இந்தியாவும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும், குறிப்பாக ஒமைக்ரான் எச்சரிக்கைப் பட்டியலி்ல் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்கும் விமானநிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர், ஆர்சிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நெகட்டிவ் வந்தபின்பே விமானநிலையத்தைவிட்டு வெளிேயற அனுமதிக்கப்படுகிறார்கள்
இந்நிலையில் இந்தியாவில் கடந்த இரு நாட்களுக்கு முன் கர்நாடகாவில் 2 பேர் மட்டுமே ஒமைக்ரானில் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 21ஆகஅதிகரி்த்துள்ளது. இதில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 9 பேரும், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் 7 பேரும் பாதிக்கப்பட்டனர். டெல்லியைச் சேர்ந்த ஒருவர் 2 தடுப்பூசி செலுத்தியபின்பும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.4 மாநிலங்கள், அதன் தலைநகரங்களில் இதுவரை ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஜெய்ப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட 9 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 4 பேரும்தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தவர்கள். இந்த 9 பேரின் மாதிரிகளையும் எடுத்து மரபணு பரிசோதனை நடத்தியதில் அவர்களுக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியானது என ராஜஸ்தான் சுகாதாரத்துறை செயலர் வைபவ் கல்ரியா தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட 8 பேரில்ஒரு பெண் அவரின் இரு மகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் நைஜிரியாவிலிருந்து வந்தவர்கள். இவர்களின் சகோதரர் பின்லாந்திலிருந்து கடந்த வாரம் வந்தவர் அவரும் பாதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்த பாதிப்பு 8ஆக அதிகரி்த்துள்ளது.
டெல்லியில் 37 வயதுள்ள இளைஞர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் தான்சானியாவிலிருந்து டெல்லிவந்து அங்கிருந்து தோஹா செல்ல இருந்தார் அப்போது அவருக்கு நடத்தப்பட்டபரிசோதனையில் கரோனா பாஸிட்டிவ் உறுதியானது. அதன்பின் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில் “ இதுவரை 17 கரோனா நோயாளிகள், அவர்களுடன் தொடர்புடைய 6 பேர் டெல்லி லோக்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு உடனடியாக சர்வதேச விமானப் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். மக்கள் முகக்கவசம் அணிந்தாலே 99 சதவீதம் அனைத்து வகையான வைரஸ் பரவலில் இருந்து காக்க முடியும். ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமைக்ரான் அனைத்திலிருந்தும் தப்பிக்கலாம்” எனத் தெரிவித்தார்