பாஜகவின் குளோனாக ஆம் ஆத்மி கட்சி விரைவில் மாறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “முகஸ்துதியின் சிறந்த வடிவம்தான் பிரதிபலிப்பு. ஆம் ஆத்மி கட்சி பாஜகவைப் போல் அதிகமாக பிரதிபலிக்கிறது, அதனுடைய இயல்புத்தன்மைக்கு தொடர்பில்லாமல் மாறிவிடும். விரைவில் பாஜகவின் குளோனாக ஆம்ஆத்மி கட்சி மாறும்”
உத்தரகாண்டில் கடந்த 5 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் மாறிவிட்டனர். ஆனால், எந்த வளர்ச்சியும் இல்லை. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன் வளர்ச்சி இன்று தொடங்குவதாக அறிவிப்பார்கள். அடிக்கல் மற்றும் பலகைகளைத் தவிர வேறு ஏதும் அங்கு இல்லை” இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி உத்தரகாண்டில் ரூ.15,728 கோடி மதிப்பில் 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.2,573 கோடி மதிப்பில் 7 திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் விரைவாக திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கிறது, அடிக்கல் நாட்டுகிறது என ப.சிதம்பரம் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.