உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு ஆளான பெங்களூரு மருத்துவர் நலமாக இருப்பதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதல் முறையாகபெங்களூருவில் தென்னாப்பிரிக் காவை சேர்ந்த 66 வயது நபருக்கும், பெங்களூருவை சேர்ந்த 46 வயதான மருத்துவருக்கும் ஒமைக்ரான்வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நபர் கடந்த 27-ம் தேதி சொந்த நாட்டுக்கு திரும்பியதை தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.
இதேபோல ஒமைக்ரான் பாதித்த பெங்களூரு மருத்துவருடன் தொடர்பில் இருந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது 43 வயதான மனைவி, 5 வயது மகள் உட்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டது. இதையடுத்து அவர் களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதித்துள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த மருத்துவர் வெளிநாடுகளுக்கு எங்கும் சென்று வரவில்லை. அப்படி இருந்தும் அவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கர்நாடக சுகா தாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது:
ஒமைக்ரான் பாதித்த மருத்து வரும், அவரது மனைவி மற்றும் மகள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். அவரது சகோதரரும் மருத்துவராக இருப்பதால் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி அவரே கவனித்துக்கொள்கிறார்.
ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளான மருத்துவரும், கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள 5 பேரும் நலமுடன் இருக்கின்றனர். ஒமைக்ரான் பாதித்த மருத்து வருக்கு முதல் 3 நாட்கள் கடுமையான உடல் வலி, குளிர் காய்ச்சல், தலைசுற்றல் இருந்தது. சுவாசிப்பதில் சிரமம் இல்லை. ஆக்சிஜனின் அளவு சரியாக உள்ளது. சனிக்கிழமையுடன் அவருக்கு அறிகுறிகள் தோன்றி 14 நாட்கள் ஆகிறது. தற்போது எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
புறக்கணிப்பு வலிக்கிறது
சம்பந்தப்பட்ட மருத்துவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒமைக்ரான் வைரஸ் பாதித்த வலியைவிட, சமூகம் தரும் வலி அதிகமாக இருக்கிறது. என்னையும் என் குடும்பத்தையும் மாநகராட்சியும், சுற்றத்தாரும் சீல் வைத்து ஒதுக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதால் எனக்கு எந்த பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போதைய சூழலும் சமாளிக்க கூடிய வகையிலே இருக்கிறது.
ஒமைக்ரான் பாதித்தால் சிலருக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம். இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. அதேவேளையில் அனைவரும் எச்சரிக்கை உணர் வுடன் இருக்க வேண்டும். நானும் என் குடும்பத்தினரும் விரைவில் வழக்கமான பணி களுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.