மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையிலான மாற்று அரசியல் முன்னணியில் சேரத் தயாராக இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மேகாலயாவில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேரை மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி சமீபத்தில் சேர்த்தது. ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கீர்த்தி ஆசாத் மற்றும் கோவா முன்னாள் முதல்வர் லூயிசின்ஹோ ஃபலேரோ போன்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்களையும் திரிணமூல் கட்சி சமீபத்தில் ஏற்றுக்கொண்டது.
இதன்மூலம் திரிணாமூல் தனது தேசிய காலடித் தடத்தை விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை திரிணமூல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
மம்தா பானர்ஜி தற்போதைய மும்பை பயணத்தின்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு,''யுபிஏ (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) என்றால் என்ன? ஏபிஏ என்று ஒன்று இல்லை என்று கூறியிருந்தார்.
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பானர்ஜியின் கருத்துகளுக்கும் கிஷோர் கூறியதற்கும் பதிலடி தந்துள்ளனர். மல்லிகார்ஜூன கார்கே, ஆதி ரஞ்சன் சவுத்திர உள்ளிட்டோர் கடுமையாக எதிர் வினையாற்றியுள்ளனர்.
காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் இறங்கியுள்ள நிலையில் இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜான்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையிலான மாற்று அரசியல் முன்னணியில் சேரத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விடுவதற்கான தளத்தை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கிறார். மேற்குவங்க தேர்தலில் பாஜகவை வீழ்த்திய மம்தா பானர்ஜியால் உத்தரப்பிரதேசத்திலும் ஆளும் கட்சியை ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும்.
மம்தா பானர்ஜியை நான் வரவேற்கிறேன். அவர் வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய விதம் அபரிமிதமானது. அதேபோன்று உத்தரபிரதேச மக்கள் பாஜகவை வீழ்த்துவார்கள்.
காங்கிரஸுக்கு செல்வாக்கு இல்லை. உத்தரப் பிரதேச மக்கள் காங்கிரஸை அங்கீகரிக்க மாட்டார்கள். வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸுக்கு 0 இடங்கள் தான் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.