குடியுரிமை (திருத்தம்) சட்டம் அடிப்படையிலேயே தேச விரோதம் அடிப்படையில் தேசவிரோதமானது, ஒரு சமூகத்தை குறிவைக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், ஜெயின், பௌத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரை இந்தியக் குடியுரிமையைப் பெற அனுமதிக்கிறது.
சிஏஏ அமலாக்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பல குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சிஏஏ நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பலர் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் பரவலான எதிர்ப்பு எழுந்தது.
மேற்கு வங்க பாஜக தலைவர்கள் குழு இன்று ( வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலத்தில் சிஏஏவை அமல்படுத்தக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஏஎன்ஐயிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
"சிஏஏ கொண்டு வரப்பட்டபோது நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். உள்துறை அமைச்சரிடம், ''எந்தவொரு சமூகத்தையும் குறிவைத்து இயற்றப்படும் எந்த சட்டமும் அடிப்படையில் தேசவிரோதமானது'' என்று எனது ஆட்சேபனையைத் தெரிவித்தேன்.
சிஏஏ சட்டங்களுக்கான விதிகளை அவர்கள் இரண்டு ஆண்டுகளாக இதுவரை அவர்கள் எழுதாமல் இருப்பதற்கும் அல்லது சட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதையும் நான் வரவேற்கிறேன். மத்திய அரசு மேலும் இச்சட்டம் குறித்த பணிகளை தொடரக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.
"இவ்வளவு முட்டாள்தனமான எதையும் செய்வதற்கு முன் அவர்கள் கடினமாக யோசித்து அதற்காக நீண்டகாலம் எடுத்துக்கொள்வார்கள் போலிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
அது தேவையில்லாமல் நாட்டை பிளவுபடுத்தும். நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கு பொறுப்பற்ற முறையில் ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்,
இவ்வாறு சசிதரூர் தெரிவித்தார்.
மேலும், ஏஎன்ஐயிடம் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி டோலா சென் இதுகுறித்து பேசினார்.
அவர், விவசாய சட்டங்களைப் போலவே மத்திய அரசு சிஏஏவை ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐயிடம் கூறுகையில், "தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படாது என்று மத்திய அமைச்சர் ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்துவிட்டது. அடுத்ததாக, அவர்கள் என்ஆர்சியை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். பந்து இப்போது அவர்களின் கோர்ட்டில் உள்ளது" என்று தெரிவித்தார்.