இந்தியா

காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி; ஆன்மா இல்லாத உடல்: கபில் சிபல் சாடல்

ஏஎன்ஐ

காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பது ஆன்மா இல்லாத உடல் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மும்பை பயணத்தின் போது, தேசியவாதக் காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது யுபிஏ (ஜனநாயக முற்போக்குக் கூட்டணி) பற்றி விமர்சித்து பேசினார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை புதன்கிழமை சந்தித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "யுபிஏ என்றால் என்ன? யுபிஏ இல்லை" என்று புதன்கிழமை கூறினார்.

மம்தா பானர்ஜி விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வியாழனன்று தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், “நூற்றாண்டு பழமையான காங்கிரஸ் கட்சி இல்லாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஆன்மா இல்லாத உடலாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது” என்று காங்கிரஸ் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை தோற்கடிப்பது வெறும் கனவு'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT