இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இணையதளம் மூலம் இனி காணிக்கை செலுத்தலாம்

செய்திப்பிரிவு

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் இணையதளம் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில்தேவசம் போர்டு, தனலக் ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இணையதளம் மூலமாக காணிக்கை செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் வழியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியும். இதற்காக சன்னிதானம், நிலக்கல், ஆகிய இடங்களில் க்யூஆர் கோடுகள் வைக்கப்பட்டுள்ளன.

சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் க்யூஆர் கோடுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் 94959 99919 என்ற எண் மூலம் கூகுள் பே வழியாக காணிக்கை செலுத்த முடியும். இதேபோல சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் பல்வேறு இடங்களில் காணிக்கை செலுத்த க்யூஆர் கோடு வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு செயல் அதிகாரி வி.கிருஷ்ண குமார் வாரியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இ-காணிக்கை வசதி பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் இதனால் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT