இந்தியா

பாஜகவுக்கு ரூ.209 கோடி தேர்தல் நன்கொடை: 2020-21-ல் புரூடன்ட் அறக்கட்டளை வழங்கியது

செய்திப்பிரிவு

பாஜகவுக்கு 2020-21-ம் நிதியாண்டில் தேர்தல் நன்கொடையாக ரூ.209 கோடியை புரூடன்ட் அறக்கட்டளை வழங்கியுள்ளது.

புருடன்ட் அறக்கட்டளை 2020-21-ம் நிதியாண்டில் பல்வேறுகட்சிகளுக்கு ரூ.245.7 கோடியை தேர்தல் நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் 85 சதவீத நிதியை அதாவது ரூ.209 கோடியை வழங்கி உள்ளது.

இதே அறக்கட்டளை காங்கிரஸுக்கு ரூ.2 கோடியை மட்டும் நன்கொடையாக வழங்கியுள்ளது. 2019-2020-ம் ஆண்டில் காங்கிரஸுக்கு ரூ.31 கோடி நன்கொடையாக கிடைத்தது. ஆனால் தற்போது இது ரூ.2 கோடியாகக் குறைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு ரூ.25 கோடியை புரூடன்ட் அளித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.5 கோடி, ஆர்ஜேடி கட்சிக்கு ரூ.5 கோடி, காங்கிரஸுக்கு ரூ.2 கோடி,ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.1.7 கோடி, லோக் ஜனசக்தி கட்சிக்கு ரூ.1 கோடிதேர்தல் நன்கொடையாக புரூடன்ட் அறக்கட்டளை வழங்கியுள்ளது.

2019-20-ல் தேர்தல் நன்கொடையாக பல்வேறு கட்சிகளுக்கு புரூடன்ட் ரூ.271.5 கோடியை வழங்கியது. இதில் பாஜகவுக்கு ரூ.217.5கோடியும், காங்கிரஸுக்கு ரூ.31 கோடியும், ஆம் ஆத்மிக்கு ரூ.11.26 கோடியும், சிவசேனாவுக்கு ரூ.5கோடியும், சமாஜ்வாதி, ஜன்னாயக் கட்சிக்கு தலா ரூ.2 கோடியும், எல்ஜேபிக்கு ரூ.2 கோடியும், ஐஎன்எல்டி கட்சிக்கு ரூ.1 கோடியும் புரூடன்ட் வழங்கியுள்ளது.

அதேபோல் 2020-21-ல் ஜெய்பாரத் தேர்தல் அறக்கட்டளையானது பாஜக, அஇஅதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு தலா ரூ.2 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT