இந்தியா

ஏழை தலித் மாணவிக்காக ரூ.15 ஆயிரம் கல்லூரி கட்டணம் செலுத்த முன்வந்த நீதிபதி

செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சன்ஸ்கிரிதி ரஞ்சன் (17) என்ற மாணவி உயர் கல்விநிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றார். தலித் மாணவியான இவர் அந்தபிரிவினருக்கான பட்டியலில் 1,469-வது இடம் பிடித்தார்.

இவருக்கு வாரணாசியில் உள்ள ஐஐடி-பிஎச்யுவில் (பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி) இடம் கிடைத்தது. ஆனால்குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் கல்லூரிக்கான அடிப்படை கட்டணம் ரூ.15 ஆயிரத்தை செலுத்த முடியவில்லை.

இதையடுத்து, அந்த மாணவி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்,“எனது தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட் டுள்ளார். அதனால் என்னுடைய கல்லூரி கட்டணத்தை ரத்து செய்துவிட்டு எனக்கான இடத்தை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தினேஷ்குமார் சிங் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி கட்டணமான ரூ.15 ஆயிரத்தை தான் செலுத்துவதாக நீதிபதி அறிவித்தார். அத்துடன், அந்த மாணவிக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதிசெய்யுமாறு கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் 3 நாட்களுக்குள் கல்லூரியில் சேருமாறு மாணவியை அறிவுறுத்தினார்.

இதனிடையே, அந்த மாணவியின் அனைத்து கல்விக் கட்டணத்தையும் அவரது பெயரில் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர்.

SCROLL FOR NEXT