விமானப் பயணம் மேற்கொள்ளாத சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுடன், ஹெலிகாப்டரில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. 
இந்தியா

சிறுவர்களுடன் ஹெலிகாப்டரில் சென்ற பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

செய்திப்பிரிவு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களுடன் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

இதுவரை விமானப் பயணம் மேற்கொள்ளாத சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு யோசனை தோன்றியது.

இதையடுத்து, ரூப்நகர் மாவட்டம் மொரிண்டா என்ற நகரில் 6 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் அவர் பயணம் செய்தார். இந்த ஹெலிகாப்டர் பயணத்தின் வீடியோ காட்சிகளையும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சரண்ஜி்த் சிங் சன்னி வெளியிட்டுள்ளார்.

‘‘ஹெலிகாப்டரில் இதுதான் என் முதல் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’‘ என்று வீடியோ காட்சியில் ஒரு சிறுவன் குறிப்பிடுகிறான். முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது ட்விட்டர் பதிவில், ‘இது மக்களின் அரசு. மொரிண்டாவில் குழந்தைகளுடன் ஹெலிகாப்டர் சவாரியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்துத் துறைகளிலும் சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதே எனது முயற்சி” என்று கூறியுள்ளார். அடுத்த விமானப் பயணத்தில் அதிக சிறுவர்களை அழைத்துச் செல்வதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT