இந்தியா

கற்பக விருட்ச வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர்

செய்திப்பிரிவு

திருப்பதியை அடுத்த ஸ்ரீநிவாச மங்காபுர கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலின் பிரம்மோற்சவ விழாவில் நேற்று கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி உற்சவ மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் குடிகொண்டுள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலின் பிரம்மோற்சவ விழா சமீபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 4ம் நாளான நேற்று காலை தேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கம் எழுப்பினர்.

SCROLL FOR NEXT