ஏழை, எளிய மக்கள் மருத்துவ செலவுகளை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறும்போது, ‘‘ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டால், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் தொலைந்துவிடுகிறது. மேலும் அந்த குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பும் சீர்குலைந்து விடுகிறது. இத்தகைய குடும்பத்தினரின் நலனுக்காக புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தலா ரூ. 1 லட்சம் வரையிலான மருத்துவ செலவுகளை சமாளித்துக் கொள்ள முடியும். 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்’’ என்றார்.