இந்தியா

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 3 லட்சம் சர்வ தரிசன டிக்கெட் 15 நிமிடத்தில் முன்பதிவு

என்.மகேஷ்குமார்

ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வெளியிடுகிறது.

பக்தர்கள் டிக்கெட் முன்பதிவுசெய்து குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் தள்ளுமுள்ளு இன்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் 2 தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன.

இதனால், திருமலைக்கு வரபக்தர்கள் முன்பு போல் ஆர்வம்காட்ட தொடங்கி விட்டனர். தினமும்10 ஆயிரம் சர்வ தரிசன டிக்கெட்டுகள் வீதம் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் மாதம் ஏழுமலையானை சர்வ தரிசனம் மூலம் தரிசிக்க நேற்று நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதம் 31 நாட்களுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. காலை 9 மணிக்கு வெளியான உடன் வெறும் 15 நிமிடங்களில் பக்தர்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து விட்டனர்.

முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலையில் தங்கும் அறைகளை பெற இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT