கட்ச் வளைகுடா பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நடந்த நிலையில் கப்பல்களை வழிசெலுத்தும் நேவிகேட்டர் தவறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று இரவு எம்வி ஏவியேட்டர் மற்றும் எம்வி ஏன்சியன்ட் கிரேஸ் ஆகிய இரண்டு சரக்கு கப்பல்கள் நேற்று இரவு மோதிக் கொண்டன,
இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் இல்லை. ஆனால்,கப்பல்களில் இருந்து வெளியேறி எண்ணெய் படலம் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள், சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர் ஆகியவை விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டன. இரண்டு சரக்கு கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளபோதிலும் அதனால் மாசு ஏற்படவில்லை. எனினும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கட்ச் வளைகுடா பகுதியில் எம்வி ஏவியேட்டர் மற்றும் எம்வி ஏன்சியன்ட் கிரேஸ் ஆகிய இரண்டு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான விபத்தில் முதல்கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதில் கப்பல்களை வழிசெலுத்தும் நேவிகேட்டர் தவறு காரணமாக இந்த மோதல் நடந்ததாகத் தெரிகிறது.
இந்திய கடலோர காவல்படை சாத்தியமான எண்ணெய் கசிவை தடுக்கும் சூழ்நிலையை கண்காணித்து வருவதாக இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.