இந்தியா

பெண் தொழில் முனைவோர், எஸ்.சி. எஸ்.டி.க்கு ரூ.500 கோடி

செய்திப்பிரிவு

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத் தின் மூலம், தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின மற்றும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்கு விக்க ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி. எஸ்.டி. மற்றும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க, தொழில் அமைப்புகளுடன் சேர்ந்து சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சார்பில், தேசிய எஸ்.சி எஸ்.டி. தொழில்மையம் அமைக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் குறைந்தது 2.5 லட்சம் தொழில்முனைவோர்கள் பயனடைவர். நாம் பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். இச்சூழலில் எஸ்.சி. எஸ்.டி. தொழில் முனைவோரின் பொருளாதார மேம்பாட்டு ஆண்டாக இது இருக்க வேண்டும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT