இந்தியா

எரிபொருள் வரி 6% உயர்வால் விமானக் கட்டணம் உயர வாய்ப்பு

பிடிஐ

விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் விமானக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. என்றாலும் சிறிய நகரங்களை இணைக்கும் விமானங்களுக்கு இந்த வரி உயர்வு பொருந்தாது.

அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில், “ஜெட் விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 8 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும். என்றாலும் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களுக்கு இந்த வரி உயர்வு இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“விமானங்களை இயக்குவதற்கான செலவில் 40 சதவீதம் எரிபொருளுக்கு ஆகிறது. இதனால் விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும்” என்று விமான நிறுவனங்கள் கோரி வரும் நிலையில் இந்த வரி உயர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த வரி உயர்வு மூலம் விமான எரிபொருள் விலை 4 5 சதவீதம் உயரும். சர்வதேச விலையை விட இந்தியாவில் விமான எரிபொருள் விலை 60 - 70 சதவீதம் அதிகமாக உள்ளது. விமானப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே அரசின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT