அதீபா ரியாஸ் 
இந்தியா

கரோனா ஊரடங்கு காலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட 11 வயது காஷ்மீர் சிறுமி

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காலத்தில்புத்தகம் எழுதி இளம் எழுத்தாளராக உருவெடுத்துள்ளார் 11 வயது காஷ்மீர் சிறுமி.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்தஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்த ஊரடங்கு காலத்தை சில மாணவர்கள் பயனுள்ள வகையில் மாற்றிக் கொண்டனர். அந்த வகையில், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பாட்டெங்கூ கிராமத்தைச் சேர்ந்த11 வயது சிறுமி அதீபா ரியாஸ்,இளம் எழுத்தாளராக உருவெடுத்துள்ளார்.

தனியார் பள்ளியில் 7-ம்வகுப்பு படிக்கும் அவர், ஊரடங்கின்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோது ஏற்பட்ட எண்ணங்கள், கருத்துகள், உணர்வுகளை எழுதி உள்ளார். இது ‘ஜீல் ஆப் பென்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 96 பக்கங்களைக் கொண்டுள்ள இந்தபுத்தகம் அமேசானில் கிடைக்கிறது.

இதுகுறித்து அதீபா கூறும்போது, “புதுமையாக எதையாவதுசெய்ய வேண்டும் என விரும்புவேன். எனக்கு சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் உண்டு. நான் எழுதிய பல கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளுக்கு பல்வேறு பரிசுகள் கிடைத்துள்ளன. இந்த புத்தகத்தை எழுத ஊக்குவித்த எனது தந்தைக்கும் அண்ணனுக்கும் நன்றி” என்றார்.

SCROLL FOR NEXT