வங்ககடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் 25 முதல் 27-ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கீழ் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. மத்திய வெப்பமண்டல நிலைகள் வரை பரவியுள்ளது. அதன் தாக்கத்தால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது.
24 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கி வரும் என எதிர்பார்க்கலாம்.
மழை எச்சரிக்கை:
கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், தெற்குப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை பரவலான மழை வாய்ப்புண்டு.
கர்நாடகா உள்பகுதி, கேரளா, மாஹே மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பொழிய வாய்ப்புண்டு.
அடுத்த 4 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கேரளாவில் குறிப்பிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மாஹே, தென் கடலோர ஆந்திரா, ஏனாம்,
ராயலசீமா பகுதிகளில் கனமழை பெய்யும்
நவம்பர் 25 முதல் 27 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
தெற்கு கடலோர ஆந்திரா, ஏனாம் பகுதிகளில்
நவம்பர் 27-ம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால் மேற்கு மத்திய வங்கக்கடலில் தமிழ்நாடு- தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையோரப்பகுதிகளில் காற்றழுத் தாழ்வுப்பகுதியாக மாறும் போது 60 கிமீ வேகத்தில் வேகமான காற்று வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா பகுதிக்கு நவம்பர் 26 முதல் 27-ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்
பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் 2-4 டிகிரி செல்சியஸ் படிப்படியாக குறையும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த 3-4 நாட்களில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மத்திய இந்தியா மற்றும் படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்
மழையளவு:
இன்று காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணநேரத்தில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு: (செ.மீ.)
தமிழ்நாடு: சோழவரம் மற்றும் ரெட்ஹில்- தலா 7, திண்டுக்கல் காமாட்சிபுரம்-5, நீலகிரி தேவாலா-5, தென்காசி சிவகிரி-5
கேரளா: இடுக்கி மைலாடுபுரா-6