கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஆடுகோடி ரிசர்வ் போலீஸ் குடியிருப்பில் துப்புரவு பணியாளர்கள் கையால் மலக்குழாய் அடைப்பு உள்ளிட்ட தூய்மை பணியில் ஈடுபடுத்தப் படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் மனித உரிமை ஆர்வலர் சுதா, கர்நாடக மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன்பின் கடந்த ஆண்டு தடையை மீறி மலம் அள்ளும் நடைமுறையை பின்பற்றிய அதிகாரிகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. எந்தெந்த அதிகாரிகள் தண்டிக்கப் பட்டுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுதா கேள்வி எழுப்பினார். இதற்கு அப்போதைய ரிசர்வ் போலீஸ் ஜெனரல் ராம் நிவாஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதை எதிர்த்து சுதா தாக்கல் செய்த மனுவை மாநில தகவல் ஆணைய தீர்ப்பாயம் ஓராண்டாக விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில் ‘‘மலம் அள்ளுவோர் தொடர்பான வழக்கில் தகவல் களை மறைத்த ஐபிஎஸ் அதிகாரி ராம் நிவாஸூக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஹைதராபாத் போலீஸ் அகாடமி யில் பணி புரியும் அவரின் டிசம்பர் 2021, ஜனவரி 2022 சம்பளத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்’' என்று ஆணையர் உத்தரவிட்டார்.